Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: corruption

ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், 'ரஜினி, ஒரு பயந்தாங்கொள்ளி' என்றும், 'விஸ்வரூபம்' படத்த வெளியிட கமல்ஹாஸன் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை, அதிமுக, திமுக, பாஜக செயல்பாடுகள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விஜயகாந்த், தனக்கே உரிய உடல்மொழியில் பதில் அளித்தார். உடல்நலம் தேறி வந்திருக்கும் விஜயகாந்தின் குரல், சில இடங்களில் குளறுவதுபோல் இருந்தது. நடிகர் கமல்ஹாஸன், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே என்று கேட்டபோது, ''அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு...? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்,'' என்று பதில் அளித்தார். கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, ''விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கியபோதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வே...
கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கண்ணு போச்சு; மாரடைப்பு வந்துச்சு; தீர்வுதான் கிடைக்கல! அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கண்ணில் பார்வை பறிபோயும், மாரடைப்பில் பாதி உயிரை இழந்தும் தவித்து வருகிறார் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருவர். வெறும் 1500 பென்ஷனுக்காக ஆண்டுக்கணக்கில் முதியவரை அலைக்கழிக்கும் அவலம் சேலத்தில் நடந்து வருகிறது. ஊழல் செல்லரித்துப்போன அரசு அதிகாரிகளால், நொந்து நூலான சாதாரண சத்துணவு ஊழியரின் கதை இது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இச்சம்பவம் ஒரு சான்று. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). பனமரத்துப்பட்டி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். சக ஊழியர் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களில் சத்துணவு ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நிதி திரட்டி, பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தம்மந...
ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்...