Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: conditional bail

சீமானுக்கு நிபந்தனை ஜாமின்!

சீமானுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலை, விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதோடு, மக்களிடம் கலகத்தைத் தூண்டியதாக ஏற்கனவே ஒரு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.   அந்த வழக்கில் தினமும் காலையில் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது.   இந்நிலையில், நேற்று சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே உள்ள கூமாங்காடு கிராமத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து சீமான் கருத்து கேட்டார். இது நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய செயல் எனக்கூறி, மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். சீமான் மட்டுமின்றி அவருடைய கட்சியைச் சேர்ந்த யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்ச்செல்வம், சிவக்குமார், தமிழரசன், மண
சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நிபந்தனை ஜாமினில் இன்று (ஜூன் 22, 2018) விடுதலை செய்யப்பட்டார்.   சேலம் - சென்னை இடையே புதிதாக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதிகளில் 100 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இது தவிர, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்விரு திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியல் ஆர்வலர் பியூஷ