
ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (அக். 12, 2017) நேரில் ச ந்தித்து இருப்பதன் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகக்குள் பிளவுகள் ஏற்பட்டன. சசிகலாவுக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி தூ க்கிய ஓ.பன்னீர்செல்வம், 12 எம்எல்ஏக்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார்.
தமிழகத்தில் காலூன்ற துடித்துக் கொண்டிருந்த பாஜக, சிதறிக்கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால்தான் தனக்கு பெரிய அளவில் ஆதாயம் எனக்கருதி, இணைப்புக்கான வேலைகளில் இறங்கியது. பாஜவின் அஜன்டாவை அதிமுகவுக்குள் இருக்கும் மைத்ரேயன் எம்பி மூல...