Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: classroom

”தப்பு செய்தால் தெருவை கூட்டணும்!”; அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நூதன தண்டனை!!

”தப்பு செய்தால் தெருவை கூட்டணும்!”; அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நூதன தண்டனை!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  -சிறப்பு செய்தி-     சேலம் அருகே, வகுப்பறையில் குப்பை போடும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தெரு கூட்டும் நூதன தண்டனை வழங்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ராமலிங்கபுரம், சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், ஏரிக்காடு, ராம்நகர், பாப்பநாயக்கன்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். 6 முதல் 10ம் வகுப்பு வரை 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பிற்கு மட்டும் வழக்கமான தமிழ் வழி மட்டுமின்றி, ஆங்கில வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.     இந்தப் பள்ளியில், வகுப்பறையில் குப்பை போடும் மாணவ, மாணவிகளுக்கு தெருவை கூட்டி சுத்தப்படுத்தும் நூதன தண்டனையை ஆசிரியர்கள்
‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

அலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து
இன்றைய பெண்கள்  நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
("புதிய அகராதி", ஏப்ரல்-2017 இதழில்) இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, நான் பணிபுரிந்து வந்த சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் எனக்குக் கிடைத்தது. (வகுப்பறையில் வாசிக்கவும் வாழ்க்கையில் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்த என் குருகுலத்திற்கு நன்றிகள்). கனடாவில் டொராண்டோ ஹம்பர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று வாரப்பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. முதல் நாள் அனுபவமே மொத்த பயிற்சியின் சாராம்சத்தை சொல்லிக்கொடுத்தது. அன்று காலை இடைவேளையின்போது நானும் என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் கழிப்பறைக்குச் சென்றிருந்தோம்.   அங்கே மிக அழகான செல்லுலாய்டு பொம்மை கணக்காய் ஓர் இளம்பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். "இவ்வளவு அழகான பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து க