
35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!
'பிணியும் மூப்பும் இறப்பும் மானுடர்க்கே அன்றி காதலுக்கு ஒருபோதும் அல்ல' என்பதை, 65 வயதிலும் தான் நேசித்த பெண்ணுக்காய் காதலை பசுமையுடன் பத்திரப்படுத்தி வந்திருக்கும் சிக்கண்ணா நிரூபித்திருக்கிறார்.
'காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை; மணம் முடித்த
அனைவருமே சேர்ந்து வாழ்ந்ததில்லை'
என்ற கண்ணதாசனின் வரிகள்,
சிக்கண்ணா - ஜெயம்மாவுக்கு
ரொம்பவே பொருந்தும்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம்
ஒலேநரசிப்புராவில்
வசிக்கும் சிக்கண்ணாதான்,
கடந்த ஒரு வாரமாக இணையங்களில்
பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர்.
இத்தனைக்கும் இவர் இப்போதும்
மிகச்சாமானியர்தான்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு
மைசூருவுக்கு கூலி
வேலைக்காகச் சென்றிருந்தார்.
அப்போது அவருக்கும்,
அதே ஊரில் வசித்து வந்த
அவருடைய உறவுக்கார
பெண்ணான ஜெயம்மாவுக்கும் (60)
பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில்
கண...