Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Chief education officer

ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆசிரியர்கள் தினத்தன்று ஒட்டுமொத்த மாணவிகள், ஆசிரியர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.   கடந்த ஆண்டு, ஊதிய உயர்வு கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்தூரில் அலுவல் நிமித்தம் சுற்றுப்பயணம் சென்றிருந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. கருமத்தம்பாளையம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் யாருமே இல்லாத நிலையில், குழந்தைகள் கரும்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் என்ன நினைத்தாரோ ரோகிணி, உடனடியாக வகுப்பறைக்குள் சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார். மற்றொரு நாள், அய்யந்திருமாளிகையில் அன்னை சத்யா பெண் குழந்தைகள் காப்பக வளாகத்தில் செயல்படும் பள்ளியிலும் அதிரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுடன் வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். இன்னொரு நாள் அரசுப்பள
ரேங்க்கிங் முறை ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை தூக்கம்!

ரேங்க்கிங் முறை ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை தூக்கம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிப்பு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களுடன் விளம்பர பதாகைகளை வெளியிட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும்போது, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அந்தந்த மாவட்ட அளவில் சாதனை படைத்தவர்களின் பெயர்களும் வெளியிடப்படும். இதுதான் காலங்காலமாக இருந்து வந்த நடைமுறை.   இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்றும், மதிப்பெண் விவரங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அத்துடன், எந்த ஒரு