Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: CBCID

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரணமாக முடிக்கப்பட்ட வழக்கை, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி காவல்துறை துருவி துருவி விசாரித்து வரும் நிலையில், ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், 'இறந்துபோன நபர் ஒன்றும் விஐவி அல்ல. ஒரு ரவுடி ஃபெல்லோ' என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி சித்தனூரில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சிலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் தாயின் மடியிலேயே உயிரிழந்தார்.   இதுகுறித்து சகுந்தலா, இரும்பாலை காவல் நிலையத்தில் தன் மகனை கோவிந்தராஜ், ராம்குமார், ஏழுமலை, முட்டை ராஜா என்கிற விஜயராஜா ஆகியோர் அடித்துக் கொன்றுவிட்டத
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழக அளவில் முக்கிய கவனம் பெற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 30, 2018) தொடங்கியது.   முதல் நாளில் மூன்று சாட்சிகளிடமாவது விசாரணை நடத்தி விடும் திட்டம் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நீதிமன்ற விசாரணையே தாமதமாக பகல் 1.05 மணிக்கு மேல்தான் தொடங்கியது என்பதால், ஒரே ஒரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போதுதான் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ம் ஆண
ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

இந்தியா, குற்றம், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் சேகரமாகும் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சில பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342.75 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ரூ.342.75 கோடியை 226 அட்டைப