Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: cauvery tribunal

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவின் நீதிபரிபாலனத்தையும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தொடர்ந்து சிதைத்து வரும் பாஜக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மீறியிருப்பதன் மூலம், தமிழகத்திற்கு பச்சை துரோகத்தை இழைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் உறங்கும் எரிமலையாக இருந்த தமிழகம், வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16.2.2018ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் நடுவண் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்