Monday, January 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: breast

மலர் மொட்டா? மத யானை தந்தங்களா? கம்பனே குழம்பிய தருணம் எது?

மலர் மொட்டா? மத யானை தந்தங்களா? கம்பனே குழம்பிய தருணம் எது?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கவிதை என்றாலே பெண்களைப் பாடுவது; பெண்களைப் பாடாவிட்டால் அது கவிதையாகவும் இராது; கவிஞனாகவும் இருக்க இயலாது எனும் அளவுக்கு, இலக்கியத்தின் எஞ்சிய அடையாளமாக இருக்கும் கவிதைகளும், கவி புனைதலும் இப்போதும் ஆணுலகம் சார்ந்தே பார்க்கப்படுகிறது. ஆக்கத்தின் மையப்புள்ளியே பெண்கள்தான். ஏனோ அவர்கள் இலக்கிய வெளிக்குள் எட்டிப்பார்க்க இப்போதும் தலைப்படுவதில்லை. அவர்களுக்கு சமூகம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் சொல்லலாம். சங்க காலத்திலும் கூட வெள்ளி வீதியார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்பாற்புலவர்கள் இருந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன.   எதற்காகச் சொல்கிறேன் என்றால், பெண்களின் வலியை அவர்கள்தானே பேச வேண்டும்? அவர்கள் இல்லாத இடத்தில் பெண்களின் அழகியலை மட்டுமே ஆண் கவிஞர்கள் வளைத்து வளைத்து எழுதித் தள்ளியிருக்கி...