Monday, December 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Bipolar

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப...