Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Bharathidasan

தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காலங்காலமாக சித்திரை முதல் நாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி பழக்கப்பட்டு விட்ட தமிழர்களிடம், திடீரென்று அன்றைய நாளில் புத்தாண்டு இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்?. வெகுசன மக்களிடம் அதிர்ச்சியும், குழப்பங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுமல்லவா? அத்தனையும் எழுந்தன முந்தைய திமுக ஆட்சியின் மீது.   புரையோடிப் போன நம்பிக்கை:   கடந்த 2008ல் ஆட்சியில் இருந்த திமுக, 'நித்திரையில் இருக்கும் தமிழா உனக்கு சித்திரை அல்ல புத்தாண்டு' என்று புரட்சிக்கவியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு' என்று ஆணையிட்டது. சரியோ தவறோ... புரையோடிப் போன ஒரு நம்பிக்கையை, அரசாணை வாயிலாக தடுத்து அணை போட்டு விட முடியுமா?. இது ஹர்ஷவர்த்தனர் காலம் இல்லை.     இந்த அரசாணைக்கு முன்பே, திரு.வி.க., தைதான் ஆண்டின் தொடக்கம் என்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலி
கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கண்ணு போச்சு; மாரடைப்பு வந்துச்சு; தீர்வுதான் கிடைக்கல! அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கண்ணில் பார்வை பறிபோயும், மாரடைப்பில் பாதி உயிரை இழந்தும் தவித்து வருகிறார் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருவர். வெறும் 1500 பென்ஷனுக்காக ஆண்டுக்கணக்கில் முதியவரை அலைக்கழிக்கும் அவலம் சேலத்தில் நடந்து வருகிறது. ஊழல் செல்லரித்துப்போன அரசு அதிகாரிகளால், நொந்து நூலான சாதாரண சத்துணவு ஊழியரின் கதை இது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இச்சம்பவம் ஒரு சான்று. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). பனமரத்துப்பட்டி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். சக ஊழியர் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களில் சத்துணவு ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நிதி திரட்டி, பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தம்மந