Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: battle flag

“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எங்களோட உசுரகூட விட்டுடுவோமே ஒழிய, எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை விட்டுத்தர மாட்டோம்,'' என்று விவசாயிகள் இன்று மீண்டும் போர்க்கொடி உயர்த்தியதால், சட்டப்பூர்வ விசாரணை அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 248 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக கால் அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சேலம் மாவட்ட வருவாய்த்துறையோ, நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளின் சர்வே எண்களை பத்திரிகைகள் மூலம் அறிவிக்கை வெளியிட்டு, சேட்டிலைட் தொழில்நுட்பத்துடன் நேரடியாக விளை ந