Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Baroda bank

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11400 மோடி வழக்கின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அதேபோன்ற மற்றொரு மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 19, 2018) கைது செய்துள்ளனர். பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி மோசடி செய்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், பிரபல பேனா நிறுவனமான ரோட்டோமேக் நிறுவனத் தலைவரான விக்ரம் கோத்தாரியும் நீரவ் மோடி போலவே வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ரோட்டோமேக் நிறுவனம். அந்த நிறவனத் தல