Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: attur

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, பட்டியலின சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.   இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.   கொடூர கொலை:   தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி திங்க
ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.   ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6
”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.   கொடுவாளால் வெட்டி கொலை முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும்,
ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, இரவு நேரத்தில் வீடு புகுந்து பள்ளி மாணவியை துடிக்க துடிக்க தலை துண்டித்துக் கொலை செய்த கொடூரன், அந்நியன் விக்ரம் போல மாற்றி மாற்றி பேசுவதால் வாக்குமூலம் பெறுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஆத்தூர் அருகே...   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தரபுரம் தெற்குக் காட்டைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மகன் தினேஷ்குமார் (25). இரண்டாவது மகன், சசிகுமார். மூத்த மகன் தினேஷ்குமார், நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவயும், இரண்டரை வயதில் செல்வதரணித் என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.   இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாமிவேலு - சின்னப்பொண்ணு (45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந
ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஆத்தூரில், சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்த கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காவல்துறை சம்மன் அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர தட்டிகளை வைத்துள்ளன.   இதனால் மரங்களின் ஆயுள் குறைவதுடன், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அக்னி செல்வம், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் கேசவன், அதற்குரிய சிஎஸ்ஆர் ரசீது கொடுத்தார். மேலும், 'இந்த புகாரின
ரேங்க்கிங் முறை ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை தூக்கம்!

ரேங்க்கிங் முறை ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை தூக்கம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிப்பு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களுடன் விளம்பர பதாகைகளை வெளியிட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும்போது, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அந்தந்த மாவட்ட அளவில் சாதனை படைத்தவர்களின் பெயர்களும் வெளியிடப்படும். இதுதான் காலங்காலமாக இருந்து வந்த நடைமுறை.   இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்றும், மதிப்பெண் விவரங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அத்துடன், எந்த ஒரு
தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
-குற்றம் கடிதல்-   'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.     ஆண்டான் அடிமை: பொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.   சேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை. நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்க