18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 அதிமுக எம்எல்ஏக்கள், இன்று (செப். 18) அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கை, கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி சரிதானா? என்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளடக்கிய 12 எம்எல்ஏக்கள் ஓரணியாகவும், மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னி¦ர்செல்வம் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலையீட்டால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ஓரணியாக இணைந்தன. இந்த இணைப்பில் உடன...