Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஹிந்தி மொழியை திணித்தால்

இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், முக்கிய செய்திகள்
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற்கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தத