Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விருப்ப மனு

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

அரசியல், முக்கிய செய்திகள்
திமுக சார்பில் ராசிபுரம்  தனித்தொகுதியில் போட்டியிட  மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த  ஒன்றியக்குழு 1வது வார்டு  கவுன்சிலரின் கணவர் முருகேசன், முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) விருப்ப மனு தாக்கல் செய்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வழக்கத்தை விட முன்னதாகவே திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.   இந்நிலையில், திமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் பணிகளையும் திமுக பிப். 17ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் போட்டியிட இம்முறை 20க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், விருப்பமனு படிவ
மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் மீது இயல்பாகவே எழும் அதிருப்தி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் ஆளுமை இல்லாத நிலை ஆகியவற்றால் எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அதீத எதிர்பார்ப்பு திமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே வரும் தேர்தலில் வேட்பாளர் சீட் கேட்டு, திமுகவில் 'பசையுள்ள' விஐபிகள் பலரும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 1996, 2006 தேர்தல்களில் அதிமுக மீதான கடும் அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக கணிசமான இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மற்ற காலங்களில், ம