Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ராணுவக் கண்காட்சி

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற கோரிக்கையுடன் வாட்ஸ் அப்பில் தகவல் வந்தால் போதும். என்ன ஏது என்று கூட முழுவதும் படித்துப் பார்ப்பதில்லை. உடனடியாக அடுத்தடுத்த வாட்ஸ் அப் குழுக்களுக்கு அதை பகிர்ந்துவிட்டுத்தான் மறுவேலை. தமிழன் என்ற உணர்வைக் காட்டிக்கொள்ள அதுவே ஆகச்சிறந்த மற்றும் எளிமையான வழிமுறையாகப் பழகிவிட்டோம். நீங்கள் மட்டுமல்ல. அப்படிச் செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். பிறகு அப்படி செய்வதில்லை. வெகுசன வாட்ஸ் அப் பயனர்கள், பகிர்வதன் மூலமே தமிழர் என்ற உணர்வில் உச்சி குளிர்ந்து கிடக்கும் சக தோழர்களுக்காக இந்தக் கட்டுரை. கடந்த பதினைந்து நாள்களாக வாட்ஸ் அப்பில், ''தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?'' என்ற தலைப்பிலான ஒரு பதிவு உலா வருகிறது. அந்தப்
#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் கருப்புக்கொடி போராட்டங்கள், ஆளும்தரப்பு மற்றும் பாஜக வட்டாரத்தில் கடும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #ஓடிப்போமோடி என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மோடி மீது எழுந்துள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்த ட்விட்டர் ட்ரெண்டிங் அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போக்குக் காட்டி வருகிறது நடுவண் பாஜக அரசு. இதற்கான 6 வார கால அவகாசம் முடிவுற்ற கடைசி நாளில், இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் தெரியவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்திய அரசு. எதிர்வரும் கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் திட்டம