Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மும்பை பங்குச்சந்தை

கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 24) ஒரே நாளில் 3.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.   பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு, புதன்கிழமை காலை முதலே கொரோனா இரண்டாவது அலையால் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவியது.   இதனால் முன்னெச்சரிக்கையாக பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு கையிருப்பில் இருந்த பங்குகளை விற்கக் தொடங்கினர். அதாவது, நிமிடத்திற்கு 860 கோடி ரூபாய் என்ற கணக்கில் பங்குகளை விற்றுத் தள்ளினர்.   சில்லரை முதலீட்டாளர்களிடையே காணப்பட்ட அச்சம், மும்பையின் தலால் தெருவில் இருக்கும் அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களிடமும் காணப்பட்டது.   மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 871.13 புள்
10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த வெள்ளியன்று தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10607.35 புள்ளிகளில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 6) மேலும் 60 புள்ளிகள் வரை உயர்க்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்திகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு வாரத்தில் 10800 முதல் 11000 புள்ளிகள் வரை நிப்டி இண்டெக்ஸ் உயர வாய்ப்புள்ளதாக பங்குத்தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி - 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3ம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு
2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மாறன் சகோதரர்களின் சன் டிவி நெட்வொர்க் மற்றும் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் இன்று 20 சதவீதம் வரை உயர்ந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு மற்றும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவன இயக்குநர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தன. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 19.89 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் ரூ.43