Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மன்சூர் அலிகான் கைது

இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

அரசியல், இந்தியா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவரான விவேக் மாவோயிஸ்ட், கடந்த ஜூன் 27ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். எப்போதும் காவல்துறை உளவுப்பிரிவின் நெருக்கமான கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் அவரை நேரில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: பிரதமர் மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளி வந்தனவே?   விவேக்: பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்ததாக, மஹாராஷ்டிரா மாநில உளவுத்துறை ஒரு கடிதத்தை வெளியிட்டது. இது எவ்வளவு பெரிய கேலி கூத்து என்றால், அப்படி கடிதம் எழுதியதாகச் சொல்லப்படும் நபர், ஜேஎன்யூ பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தவர்.   சிறையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வத
எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 17) காலை 7 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானை, அவருடைய வீட்டில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.   சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, மன்சூர் அலிகான் சேலம் வந்திருந்தார்.   தும்பிப்பாடி கிராமத்திற்குச் செல்றபோது, ''எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை யார் தொட்டாலும் எட்டு பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார். இந்த ஆவேசப் பேச்சுதான், அவரை கைது செய்வதற்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.