Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பேராசிரியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட்! ஊழியர் விரோத போக்கில் பெரியார் பல்கலை!!

போராட்டத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட்! ஊழியர் விரோத போக்கில் பெரியார் பல்கலை!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் 57 பேருக்கு ஒரே நாளில் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி, பெரியார் பல்கலை நிர்வாகம் முரட்டுத்தனமான ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலையில் நிரந்தர ஊழியர்களுடன், ஒப்பந்த அடிப்படையில் 329 ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். எழுத்தர், உதவியாளர், தட்டச்சர், தகவல் உள்ளீட்டு அலுவலர், கண்காணிப்பாளர், சுருக்கெழுத்தர் என பல நிலைகளில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.   ஆசிரியர் அல்லாத ஒப்பந்தப் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை நிர்வாகத்துடன் பலகட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் கணக்கில் அல்லாமல் மாத அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்; மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தினக்க
பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலையில், கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே மூத்த பேராசிரியர்கள் சிலர் துறைத்தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியதால் துணை வேந்தர் கடும் அதிருப்தி அடைந்தார்.   சேலம் பெரியார் பல்கலையில் 2018-19ம் கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூலை 2ம் தேதி தொடங்கின. இதையொட்டி, அன்றைய தினம் பல்கலையில் பணியாற்றும் அனைத்து உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம், துணை வேந்தர் கொழந்தைவேல் தலைமையில் நடந்தது.   செனட் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், பகல் 12 மணிக்கு தொடங்கி 1.45 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்ட நிகழ்வுகள் வெளியே 'லைவ்' ஆக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரின் செல்போன்களும் கூட்டம் முடியும் வரை செயல்படாத வகையில் ஜாமர் கருவி மூலம் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கு 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்பட