Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தர்மபுரி.

தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!

தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!

தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியதாக மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சு வேலை செய்பவர். இவருடைய மனைவி மாலினி (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   அதற்கு அடுத்த நாள் காலையில் மாலினி, பிரசவ அறை அருகே உள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து பார்த்தார். அப்போது, தன்னுடைய குழந்தை திடீரென்று மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்! பட்டப்பகலில் மர்மப்பெண் கைவரிசை! வடமாநில கும்பலுக்கு தொடர்பு?

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்! பட்டப்பகலில் மர்மப்பெண் கைவரிசை! வடமாநில கும்பலுக்கு தொடர்பு?

தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் ஹிந்தி அல்லது உருது மொழி பேசிய பெண்ணின் கைவரிசை உள்ளதால், வடமாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமோ என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சானூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சரான இவருடைய மனைவி மாலினி (19). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது.   நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   அதற்கு அடுத்த நாள் காலையில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாலினி கழிப்பறைக்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் படுக்கைக்
மேட்டூர் அணை நிரம்பியதால் சேலத்தில் நிலநடுக்கமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

மேட்டூர் அணை நிரம்பியதால் சேலத்தில் நிலநடுக்கமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா, உலகம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 22, 2018) காலை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதுதான் நில அதிர்வுக்குக் காரணம் என்ற தகவலால் மேலும் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியில் இருந்து 7.50 மணிக்குள் பரவலாக லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, சித்தனூர் என மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்கள் மட்டுமின்றி, மாநகர பகுதிகளில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.   வீடுகளில் திடீரென்று பாத்திரங்கள்¢ உருண்டு கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பலர், பாதுகாப்பு கருதி வீதிகளுக்கு ஓடிவந்தனர். இன்று காலை பொதுமக்கள் தெருக்களில் கூடி இதைப்பற்றியே ஆச்சர்யமும் பீதியும் க