Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பலால் இன்று (டிசம்பர் 13, 2017) சுட்டுக்கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்த ஆய்வாளருக்கு, சக காவல்துறையினர் இரங்கலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த தேவர்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் டி-4 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிதான் இந்த காவல் சரகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (37) என்பவர் புழல் புதிய லட்சுமிபுரம் என்ற பகுதியில் மஹாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சுவரில் துளையிட்டு 3.50 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி இந்த துணிகரச் சம்பவம
வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்.18ம் தேதி காவல்துறை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டை முடிந்து கடந்த 2017, 18ம் தேதியுடன் 13 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை, 'பட்டுக்கூடு ஆபரேஷன்' (Operation Cocoon) மூலம் வேட்டையாடிய அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார், 'வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்' (Veerappan - Chasing the Brigand) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் வீரப்பன் ஏன் வேட்டையாடப்பட்டார், கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார், அமைச்சர் நாகப்பா ஆகியோரை வீரப்பன் கடத்தியது ஏன் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.   காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கே.விஜயகுமார், நடுவண் பாதுகா