Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கொங்கைகள்

அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் இன்று, மற்றுமொரு குறுந்தொகை பாடலைப் பற்றி பார்க்கலாம். ஒரு கவிஞன் என்பவன், எப்போதும் சொற்களால் சரம் தொடுப்பவன். அவன் யாவற்றையும் அகக்கண்களால் காட்சி மொழியாகப் பார்த்து, ரசித்து, முழுமையாக உள்வாங்கிக் கொண்டவன். அதன்பிறகே, கவிஞனிடம் இருந்து சொற்கள் அருவியாக வந்து விழுகின்றன. கவிஞனின் சொற்கள் என்பது சூழலுக்கு ஏற்ப, கணைகளாகவும் சீறும்; பூமாலையாகவும் வந்து விழும். நாம் முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டதுபோல், சங்க இலக்கியங்களில் பெண்ணை... பெண்களின் முகத்தை, கூந்தலை, கொங்கைகளை பாடாத புலவர்களே இல்லை. அப்படி பாடாதவன் புலவனே இல்லை. சங்ககாலம் தொட்டே பெண்ணை மலரோடும், மதியோடும் ஒப்புநோக்கி வந்திருக்கிறார்கள். இதில், இப்போதுள்ள 'பொயட்டு'களும் விதிவிலக்கு அல்ல.   புகழேந்தி புலவர், குறுந்தொகையின் கலித்தொடர் காண்டத்தில்,  
மலர் மொட்டா? மத யானை தந்தங்களா? கம்பனே குழம்பிய தருணம் எது?

மலர் மொட்டா? மத யானை தந்தங்களா? கம்பனே குழம்பிய தருணம் எது?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கவிதை என்றாலே பெண்களைப் பாடுவது; பெண்களைப் பாடாவிட்டால் அது கவிதையாகவும் இராது; கவிஞனாகவும் இருக்க இயலாது எனும் அளவுக்கு, இலக்கியத்தின் எஞ்சிய அடையாளமாக இருக்கும் கவிதைகளும், கவி புனைதலும் இப்போதும் ஆணுலகம் சார்ந்தே பார்க்கப்படுகிறது. ஆக்கத்தின் மையப்புள்ளியே பெண்கள்தான். ஏனோ அவர்கள் இலக்கிய வெளிக்குள் எட்டிப்பார்க்க இப்போதும் தலைப்படுவதில்லை. அவர்களுக்கு சமூகம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் சொல்லலாம். சங்க காலத்திலும் கூட வெள்ளி வீதியார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்பாற்புலவர்கள் இருந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன.   எதற்காகச் சொல்கிறேன் என்றால், பெண்களின் வலியை அவர்கள்தானே பேச வேண்டும்? அவர்கள் இல்லாத இடத்தில் பெண்களின் அழகியலை மட்டுமே ஆண் கவிஞர்கள் வளைத்து வளைத்து எழுதித் தள்ளியிருக்கி