Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், உடன் படித்து வந்த கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. செப்டம்பர் 6ம் தேதி, கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன
வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (செப்டம்பர் 11, 2018) கூறினார்.   முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் சேலம் வந்தார். வழக்கமாக வார இறுதி நாளாக பார்த்து நிகழ்ச்சிகளை திட்டமிட்டு சேலத்திற்கு வருகை தரும் முதல்வர், இந்தமுறை வாரத்தின் துவக்கத்திலேயே வந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசுதான் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசின் நிதி நெருக்கடி காரணமாக, எரிபொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்திட முடியாது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடந்தது என்பதை வைத்து மட்டுமே அவரை குற்றவாளி என்று சொல்லி விட முட
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழக அளவில் முக்கிய கவனம் பெற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 30, 2018) தொடங்கியது.   முதல் நாளில் மூன்று சாட்சிகளிடமாவது விசாரணை நடத்தி விடும் திட்டம் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நீதிமன்ற விசாரணையே தாமதமாக பகல் 1.05 மணிக்கு மேல்தான் தொடங்கியது என்பதால், ஒரே ஒரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போதுதான் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ம் ஆண