Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குரியன் ஜோசப்

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

இந்தியா, முக்கிய செய்திகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே சக நீதிபதிகள் இன்று (ஜனவரி 12, 2018) புகார் கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நிர்வாகம் குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று காலை கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பாக, நீதிபதிகள் குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி கொடுத்தது கிடையாது என்பதால், தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பானது. நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு