Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஓரியண்டல் வங்கி

ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
டெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவாகிவிட்ட நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர நகை வியாபாரி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புகார் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் ரோட்டோமேக் பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, ஆறு பொதுத்துறை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மெகா மோசடி வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மற்றொரு நகை வியாபாரி. டெல