Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: எம்எல்ஏ

எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு; மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வா?

எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு; மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வா?

சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசுப்பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி வெகுசன மக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எம்எல்ஏக்களுக்கு இரட்டை மடங்கில் சம்பளத்தை உயர்த்திவிட்டு, அதன் சுமையை சமாளிக்க சாமானியர்கள் பயணிக்கும் பேருந்து கட்டணத்தை உயர்த்தலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. இதற்கிடையே, ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு தள்ளிப்போனது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் இறுதியாக கேட்டதோ 2.57 மடங்கு ஊதிய உயர்வு. ஆனால், அரசுத்தரப்பு அவர்களுக்கு வழங்கியது 2.44 மடங்கு. இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 0.13 சதவீதம் மட்டுமே. அதாவது கால் சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், நி
ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

அரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம்