Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உயர்கல்வித்துறை செயலாளர்

பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் புதிதாக தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான நியமன வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வெளிப்படைத்தன்மையுடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பேராசிரியர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.   சேலம் பெரியார் பல்கலைக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் அத்தனை நெருங்கிய தொடர்போ என்னவோ.... நிர்வாகம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வில்லங்கமும் சேர்ந்தே இணைந்து கொள்கிறது. அண்மைக்காலமாக ஊழலுடன் சாதிய பற்றும் சேர்ந்து கொண்டுள்ளது.   தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான அறிவிப்புதான் லேட்டஸ்ட் வில்லங்கம். இந்தப் பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வந்த பேராசிரியர் லீலா, 2018, பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார். அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பே அதாவது கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, புதிய தேர்வாண
புதிய ஊழலுக்கு அடித்தளமிட்ட பெரியார் பல்கலை ‘செஞ்சுரி’ சிண்டிகேட் கூட்டம்!

புதிய ஊழலுக்கு அடித்தளமிட்ட பெரியார் பல்கலை ‘செஞ்சுரி’ சிண்டிகேட் கூட்டம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
-சிறப்புச்செய்தி-   சேலம் பெரியார் பல்கலையில் கடந்த காலங்களில் அடுக்கடுக்காக அரங்கேறிய ஊழல் விவகாரங்களை விவாதிக்காமல், மீண்டும் புதிதாக ஊழல் புரிவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது, பல்கலையின் நூறாவது சிண்டிகேட் குழு கூட்டம்.   சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 100வது சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை கூட்டரங்கில் நேற்று (ஜூன் 28, 2018) நடந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது சிண்டிகேட் உறுப்பினர்கள் கூடி விவாதித்து, பல்கலை வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. சிண்டிகேட் குழுவின் 'செஞ்சுரி' கூட்டம் என்பதோடு, புதிய துணைவேந்தர் கொழந்தைவேல் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது கூட்டம் என்பதாலும் பல்கலை பேராசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவின.   குறிப்பாக, சர்ச்சைக்குரிய வகையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் பதிவ
பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார். கோயம்பத்தூர் பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதியை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். தமிழக உயர்கல்வித்துறை வரலாற்றில் பணியில் இருக்கும் துணை வேந்தர் ஒருவர், லஞ்ச புகாரில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கணபதி, துணை வேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியதாகவும், ஆட்சியாளர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின. மேலும், இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை ந