Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உடற்கூறாய்வு

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரண வழக்கை சரியாக புலனாய்வு செய்யாததால் எட்டு ஆண்டுகள் கழிந்தும் தூக்கம் தொலைத்து நிற்கிறது சேலம் காவல்துறை. சிபிசிஐடி காவல்துறை மீண்டும் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், இளைஞரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் முதல் வழக்கை நீர்த்துப் போகச் செய்தவர்கள் வரை பலரும் கிலி அடித்துக் கிடக்கின்றனர்.  சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காத்தவராயன் கோயில் அருகில் வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக இருந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தற்போது 18, 14, 11 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.   கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதியன்று பகல் 11 மணியளவில், அதே ஊரைச் சிலர் மணிகண்டனை
கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கேரளா மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவோவிய போராளி மணிவாசகத்தின் சடலம், கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13) இரவு சேலம் கொண்டு வரப்பட்டது. கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி என்ற வனப்பகுதியில் கடந்த அக். 29ம் தேதி அம்மாநிலத்தின் தண்டர்போல்ட் எனப்படும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறைக்கும், மாவோவிய போராளிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அந்த மோதலில் மாவோவிய போராளிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் மணிவாசகம் (55), சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். அவர் கேரளா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோவிய போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்து