Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஈரோடு

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,
சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

அரசியல், ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தி இல்லை என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக ஆட்சேபித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு தன்னிச்சையாக பேட்டி அளிக்கக்கூட மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களுடன் கட்சிகளைக் கடந்து நட்பு பாராட்டினாலோ, தொழில் ரீதியிலான தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தாலோ உடனடியாக அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவர். இத்தகைய ராணுவக் கட்டுப்பாடு எல்லாமே ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே. அவர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருமே ஊடகங்களிடம் தனித்து பேசத்தொடங்கிவிட்டனர். காலையில் ஓர் எம்எல்ஏ பேசியதை மாலைய
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர