Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆதார் எண்

ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
ஆதார் எண் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடுவண் பாஜக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆதார் அட்டை விநியோகம் மற்றும் ஆதார் எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா இடத்திலும் ஆதார் எண் கட்டாயம் என்றது. வங்கிக் கணக்கு, மொபைல் போன், வருமான வரி, பான் அட்டை மற்றும் சமூக நலத்திட்ட பயன்களைப் பெறுவது வரை ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக நடப்பு மார்ச் 31 வரை அவகாசம் அளித்திருந்தது. இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான சேவைகளைப் பெறவும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக காலக்கெடுவை நீட