Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆதரவற்ற குழந்தைகள்

சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்புக்கட்டுரை -   பள்ளிக்கல்வித்துறையின் பாராமுகத்தால் ஒரே பள்ளியில் படித்து வரும் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த 29 மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கேள்விக்குறியாகி உள்ளது. சேலத்தை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 470க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வேடுகாத்தாம்பட்டி, பனங்காடு, ஆண்டிப்பட்டி, பெத்தானூர், குட்டக்காடு, சந்தைக்கரடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி ஆகிய பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம், பெரும்பாலும் வெள்ளிப்பட்டறைத் தொழிலை நம்பியே இருக்கிறது. இத்தொழிலுக்கு அடுத்தபடியாக அவர்களுக்குக் கைகொடுப்பது, கட்டட வேலை. வெள்ளிப்பட்டறை முதலாளிகளைத் தவிர, மற்றவர்கள் 200 ரூபாய் கூலிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சி வர்க்கத்தினர்தா