Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அம்மா உணவகம்

இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

சேலம், முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.   சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும்
சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமான வேறுபாடு நூலிழை அளவே என்பதே இயற்கைக் கோட்பாடு. கொஞ்சம் அசந்து இருந்தாலும் இந்நேரம் அம்மா உணவகமாக மாறி இருக்க வேண்டிய ஓர் அரசுப்பள்ளியை மீட்டெடுத்து, இன்று முந்நூருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியாக உயர்த்திக் காட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர். சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிதான், தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. அத்தகைய அளப்பரிய உழைப்பிற்குச் சொந்தக்காரர், கார்த்திகேயனி (50). அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். நாம் அந்தப்பள்ளியில் தொடர்ச்சியாக இரு நாள்கள் பார்வையிட்டோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் நுழைந்து பார்த்தோம். அவை குழந்தைகள் அமர இடமின்றி பிதுங்கி வழிந்தன. அந்தளவுக்கு மாணவர் சேர்க்கை அபரிமிதமாக இருந்தது.   கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளிதான் கடை