Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: மக்கள் கிராமசபை

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

அரசியல், முக்கிய செய்திகள்
சேலம் அருகே நடந்த திமுக மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த வீரபாண்டி ராஜாவால், அவருக்கு எதிர்தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு உருவானது. விரைவில் வர உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக வகுத்துள்ள பரப்புரை வியூகங்கள் மக்களிடம் வெகுவாக கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக அக்கட்சியினர் நேரடியாக மக்களை சந்தித்து, இப்பொழுதே அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைகளையும், ஆளுங்கட்சியின் அவலங்களையும் கேட்டு வருகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   கட்சி அளவில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் அதேநேரம், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களும் வெட்டவெளிச்சமாகத் தவறவில்லை. சேலம் கிழக்கு மாவட்ட திமுகவைப் பொருத்தவரை அயோத்தியாப்பட்டணம் மிக ம...