Sunday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: பிணை

பெரியார் பல்கலை ஆசிரியர் பிணையில் விடுதலை; பாலியல் புகார் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

பெரியார் பல்கலை ஆசிரியர் பிணையில் விடுதலை; பாலியல் புகார் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பல்கலைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்பதால் பாலியல் புகாரில் சிக்க வைக்கப்பட்ட உதவி பேராசிரியரை பிணையில் விடுதலை செய்து சேலம் நீதிமன்றம் இன்று (மே 5) உத்தரவிட்டுள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார் (32). இவர் மீது எம்.ஏ., இறுதியாண்டு படித்து வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர், பாலியல் புகார் அளித்தார்.   இது குறித்து, சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் பிரேம்குமார் மீது பாலியல் சீண்டல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமை, சாதி வன்கொடுமை ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.   இதையடுத்து அவர், முன்பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் சரணடையும...