திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?
-திண்ணை-
''பெரியார் பல்கலைக்கழகத்துல
முக்கிய பதவிகளுக்கு
ஜனவரி 31, 2019ம் தேதி நடக்க
இருந்த இண்டர்வியூவை திடீர்னு
ஒத்திவைச்சுட்டாங்களாம்.
இதுக்கெல்லாம் பேனாக்காரர் பேச்சுதான்
காரணம்னு பல்கலைக்கழக
வட்டாரத்துல உங்கள பத்திதான்
பரபரப்பா பேசிக்கிறாங்கனு,''
சொல்லியபடியே திண்ணையில்
வந்து அமர்ந்தார்
நம்ம நக்கல் நல்லசாமி.
''யோவ் நக்கலு.... அந்த சேதிய நானும் கேள்விப்பட்டேன். அதுக்காக நம்ம பேச்சாலதான் இண்டர்வியூ நின்னுப்போச்சுனு சொல்லி நமக்கு நாமலே பெருமை பேசிக்கிடலாமா?னு,'' கேட்டுக்கொண்டே உப்பு தூக்கலாக போட்ட வறுகடலையை கொறிக்க ஆரம்பித்தார் பேனாக்காரர்.
அப்படியே நமக்கும் ரெண்டு உப்புக்கடலை கொடுங்கனு வந்து அமர்ந்தனர் பொய்யாமொழியாரும், ஞானவெட்டியாரும்.
''சரி....இண்டர்வியூ எதுனால நின்னுப்போச்சாம்?'' ஆரம்பித்தார் ஞானவெட்டியார்.
...