
பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!
தமிழகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழில் சிறந்த படைப்பாளளர்களுள்
ஒருவராக திகழ்கிறார் அம்பை (77).
இவருடைய இயற்பெயர், சி.எஸ். லட்சுமி.
இவர், சிறகுகள் முறியும்,
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,
அந்திமழை, காட்டில் ஒரு மான்,
வற்றும் ஏரியின் மீன்கள் உள்ளிட்ட
பல படைப்புகளை எழுதியுள்ளார்.
தவிர, ஆங்கிலத்திலும் கணிசமான
நூல்களை எழுதியிருக்கிறார்.
இவர் பிறந்தது கோவையாக இருந்தாலும்,
மும்பை, பெங்களூருவில்தான் வளர்ந்தார்.
டெல்லி நேரு பல்கலையில் பி.ஹெச்டி
படிப்பை முடித்த அவர், பள்ளி, கல்லூரி
ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருடைய கணவர், விஷ்ணு மாத்தூர்.
அவர் திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
தற்போது குடும்பத்துடன்
மும்பையில் வசிக்கிறார் அம்பை.
எழுத்தாளர் அம்பை தனது
18 வயதிலேயே 'நந்தி மல...