
திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!
திருச்செங்கோடு அருகே,
பொது வெளியில் மது
அருந்திய பட்டியல் சமூக
இளைஞர்களை உள்ளூரைச்
சேர்ந்த கவுண்டர் சமூக
ஆள்கள் தட்டிக் கேட்டபோது,
அவர்கள் எழுந்து நின்று
பதில் சொல்லாததால்
சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பட்டியல் சமூக
வாலிபரின் காது
ஜவ்வு கிழிந்தது.
நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு அடுத்த
மல்லசமுத்திரம் அருகே உள்ள
அவினாசிப்பட்டியைச் சேர்ந்த
செங்கோடன் மகன்
வெற்றிவேல் (32).
ரிக் லாரி ஓட்டுநர்.
இதே ஊரைச் சேர்ந்த
சின்னுசாமி மகன்
ராஜமாணிக்கம் (40).
அவினாசிப்பட்டி
ஊராட்சிமன்றத்
துணைத்தலைவர்.
இருவரும் உறவினர்கள்.
கடந்த 4ம் தேதி இரவு,
அவினாசிப்பட்டிக்கு பக்கத்து
ஊரான வண்டிநத்தம்
சின்ன ஏரி பகுதியில்
அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள்
மோட்டார் சைக்கிளில்
வீட்டுக்குச் சென்றபோது
செயின் ரிப்பேர் ஆனதால்
அதை சரி செய்து
கொண்டிருந...