Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: உண்ணாவிரதம்.

சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீரென்று இன்று (ஜூன் 23, 2018) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.   சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை திட்டங்களுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.   குறிப்பாக மன்சூர் அலிகான், 'எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவேன்,' என்று ஆவேசமாக பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கடந்த 17ம் தேதி காலை, சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக...
தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா...
ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 'பக்கோடா' முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.   மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும். அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாதங்கள...