Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: இந்தியா தோல்வி

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ் ...
டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தலைகள் உருண்டன: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்க...