ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!
ஆத்தூர் அருகே,
சேகோ ஆலையில்
கழிவுநீர்த் தொட்டியை
சுத்தம் செய்வதற்காக
தொட்டியின் மேல் மூடியை
திறந்தபோது விஷ வாயு
தாக்கியதில்
கூலித்தொழிலாளி
மூச்சுத்திணறல்
ஏற்பட்டு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
ஜவ்வரிசி, ஸ்டார்ச்
தயாரிப்பதற்கான
மரவள்ளிக் கிழங்குகளை
அரைத்த பின்னர்
வெளியேற்றப்படும்
கழிவு நீரை தேக்கி வைக்க,
6...