Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ஆட்சேபனை மனு

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.   இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...
எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.   பாரத்மாலா பரியோஜனா:   சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.   எத...
படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி   

படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி  

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறும் அதிகாரிகள், படிக்காத விவசாயிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பார்கள்? என பொதுமக்கள் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.   சேலம் மாவட்டத்தில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைய உள்ள இடங்கள், ஏற்கனவே அளக்கப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு உள்ளன. அந்தப் பகுதிகளில் தற்போது துல்லிய அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. குள்ளம்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 16, 2018) துல்லிய அளவீடு நடந்தது. இதற்காக தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், சர்வேயர்கள் இன்று காலை குள்ளம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட முப்பதுக்கும் ம...