Friday, March 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலத்தில், நாளை (நவ. 23) நடக்க இருந்த கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (நவ. 23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதோடு, இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு வந்தது.   இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நடக்க இருந்த...
சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு அமைப்புகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு நவ.23, 24 ஆகிய நாள்களில் நடக்கிறது.   சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த 28.8.2019ம் தேதி (அறிவிக்கை எண்: 02/2019) வெளியிடப்பட்டது. அதேபோல், மத்திய கூட்டுறவு வங்கி தவிர இதர நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களும் மேற்சொன்ன தேர்வு முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பும் மேற்கண்ட தேதியில் (அறிவிக்கை எண்: 01/2019) வெளியிடப்பட்டது. இனசுழற்சி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இப்பணியிடங...
கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கேரளா மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவோவிய போராளி மணிவாசகத்தின் சடலம், கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13) இரவு சேலம் கொண்டு வரப்பட்டது. கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி என்ற வனப்பகுதியில் கடந்த அக். 29ம் தேதி அம்மாநிலத்தின் தண்டர்போல்ட் எனப்படும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறைக்கும், மாவோவிய போராளிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அந்த மோதலில் மாவோவிய போராளிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் மணிவாசகம் (55), சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். அவர் கேரளா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோவிய போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்து...
சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை,  மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவராக சித்தரித்து, உளவுத்துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்கும் மூன்றாம்தர வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது அரசியல் அரங்கில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து 'டிப்-டாப்' ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்க...
போராட்டத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட்! ஊழியர் விரோத போக்கில் பெரியார் பல்கலை!!

போராட்டத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட்! ஊழியர் விரோத போக்கில் பெரியார் பல்கலை!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் 57 பேருக்கு ஒரே நாளில் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி, பெரியார் பல்கலை நிர்வாகம் முரட்டுத்தனமான ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலையில் நிரந்தர ஊழியர்களுடன், ஒப்பந்த அடிப்படையில் 329 ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். எழுத்தர், உதவியாளர், தட்டச்சர், தகவல் உள்ளீட்டு அலுவலர், கண்காணிப்பாளர், சுருக்கெழுத்தர் என பல நிலைகளில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.   ஆசிரியர் அல்லாத ஒப்பந்தப் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை நிர்வாகத்துடன் பலகட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் கணக்கில் அல்லாமல் மாத அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்; மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தினக்க...
பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் சேலத்தில் மூக்கனேரி, புது ஏரி ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அளவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பரவலாக அதிகரித்திருக்கிறது. ஏரிகள் உள்ளிட்ட கணிசமான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. டிசம்பர் வரை நமக்கு வடகிழக்குப் பருவமழை பெய்ய இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இவ்விரு பருவமழைக் காலங்களும், இந்த ஆண்டில் பெரிய அளவில் விவசாயிகளுக்கு துணை புரிந்துள்ளது எனலாம்.   சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 105 ஏரிகள் உள்ளன. தவிர, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழும் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பனைமரத்துப்பட்டி ஏரி உள்ள...
சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களே அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று அருண் நகர், ராஜராஜன் நகர் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வந்தாலும் வந்தது, சேலம் மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. என்னதான் சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக நிலை உயர்த்தப்பட்டாலும், நகர் ஊரமைப்பு பொறியியலில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறது எனலாம்.   சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சாலைகள்; கால்வாய்கள், ஒழிக்கவே முடியாத கொசுத்தொல்லை, அவற்றால் உண்டாகும் காய்ச்சல் என அவலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது, மாம்பழ மாநகராட்சி. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி பெய்து வரு...
சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியின் வழியாக கழிவு நீர் வெளியேறி, நடுத்தெருவில் ஓடையாக பாய்ந்தோடுவதால், சாலையும் சிதிலமடைந்துள்ளதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. சேலம் சின்னத்திருப்பதி பாரதி நகர், உடையார் தெரு, மாரியம்மன் கோயில் எதிரில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழி தோண்டப்பட்டு உள்ளது. அதன்மீது சிமெண்ட் மூடி போட்டு மூடப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் 8 மற்றும் 7 ஆகிய இரு கோட்டங்களுக்கும் பொதுவாக உள்ள இந்த சாலை வழியாகத்தான் அஸ்தம்பட்டி - ஏற்காடு முதன்மைச் சாலைக்கு வந்தடைய வேண்டும். அதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகம்.   கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடைக் குழி மீது போட்டப்பட்டிருந்த சிமெண்ட் மூடி திடீரென்று உடைந்தது. அன்று முதல், அந்தக் குழி வழியாக கழிவு நீர் பெருக்கெடுத்த...
கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததால், சேலம் மாவட்டத்தில் பரவலாக நெல் நாற்று நடவும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   பூகோள ரீதியாகவே, தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால், பருவ மழைக்காலங்களில் கூட சராசரியைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருக்கிறது. புயல், வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் மழை கிடைத்தால்தான் உண்டு என்கிற நிலைதான் கடந்த சில ஆண்டுகளாக நிலவுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக்காலமும், அதன்பிறகான வடகிழக்குப் பருவமழைக்காலமும் விவசாயிகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இயல்புக்கு அதிகமாகவே மழைப்பொழிவு இருந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதுடன், விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழர் த...
சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் ஆவின் நிறுவனம் புதிய முயற்சியாக ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை அறிமுகம் செய்திருக்கிறது. தித்திக்கும் இதன் சுவை, மனிதர்களின் சுவை உணர்வை மேலும் பரவசமாக்குகிறது. தமிழ்நாட்டில் 17 இடங்களில் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் இயங்கி வரும் ஆவினுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. தினமும் 5 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்கிறது. நேரடி பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், டெட்ரா பால், நறுமணப்பால், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் விற்பனையும், கணிசமான சந்தைப் பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தாண்டு புதிய முயற்சியாக சேலம் ஆவின் நிறுவனம், ஸ்பெஷல் கேரட் மைசூர்பா என்ற இனிப்பு ...