Sunday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சென்னை

மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மதவாத அரசியலால் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆண்டுக்கு ஆண்டு பின்னோக்கிச் சென்றுகொண்டுள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் கடமை பற்றி பிரதமர் நரேந்திர மோடி வகுப்பெடுப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் இருக்கிறது. தினத்தந்தி நாளிதழின் பவள விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 6, 2017) சென்னை வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களின் கடமை குறித்தும் பேசத்தவறவில்லை. ஊடகங்கள் குறித்து அவர் பேசியதில் முக்கியமான இரண்டு செய்திகள் கவனத்துக்குரியவை. ஒன்று, இந்தியாவில் ஊடகங்கள் அரசை சுற்றியே சுழல்கின்றன. இரண்டாவது, 125 கோடி மக்களை சுற்றியே இருக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை பத்திரிகைகள் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு செய்திகள். அவர் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியாவில் தனி முதலாளிகளின் கையில் ஊடக...
அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்துவதற...
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்...
பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட கட்சிகளிடம் சாதிய உணர்வு இருந்தாலும், ஜனநாயகத் தன்மை கொண்டது; ஆனால் பாஜக அப்படி அல்ல. அது முழுக்க முழுக்க மதவாதம் பேசக்கூடிய கட்சி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (நவம்பர் 5, 2017) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். திராவிடக் கட்சிகள், பாஜக, தலித் அரசியல், ரஜினி, கமல் அரசியல், மதவாதம், சாதியம் என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவருடைய பேட்டியில் இருந்து... பாஜக தலித் கட்சிகளை வளைக்கும் திட்டத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மாயாவதி வரை அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டிலும் அதற்கு முயற்சித்தார்கள். அதை குறிப்பிடும் வகையில்தான் என்னை வளைக்க முடியாமல் தோற்றுப்போன வருத்தத்தில் என் மீது பாஜக தலைவர் தமிழிசை விமர்சனங்களை முன்வைக்க...
என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''என் பிறந்த நாளையொட்டி யாரும் கேக் வெட்ட வேண்டாம். அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுங்கள்'' என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கடலில் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கலப்பதாக ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். மேலும், அவர் அதிகாலையில் திடீரென்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார். வழக்கமான ட்விட்டர் அரசியலில் இருந்து கமல் நேரடியாக களம் இறங்கியது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்ப டுத்தியது. அத்துடன் அவர், அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்றுதான் ரசிகர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தாண்டு இரண்டு நாள்கள் முன்னதா...
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார். ...
கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்

கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில் மின் இணைப்புப் பெட்டியில் இருந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இன்று (நவம்பர் 1, 2017) மதியம் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே இந்த துயரம் நிகழ்வு நடந்துள்ளது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் உள்பட மொத்தம் 8 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்நிலையில் கொடுங்கையூர் நிகழ்வு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது பதிவில், "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவன செய்ய வேணடும்" என்று ...
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். சிறுமிகள் பலி: சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த கா...
வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே  கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது. நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார். https://twitter.com/twi...
ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு;  லதா ரஜினிகாந்த் வழக்கு!

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு; லதா ரஜினிகாந்த் வழக்கு!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்புத் திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தபோது, அதை வரவேற்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தால்தான் வருமானம் பாதிக்கப்பட்டதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக அந்தக் கடைக்கு அவர் மாதம் 3,702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், மார்ச் மாதம் முதல் 21,160 ரூபாய் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாந...