இவள் புதியவள்: ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு
''பெண்கள் சுதந்திரமாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று இருக்க வேண்டும் என்றுதான் இஸ்லாத் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்களை ஆண்கள் சமுதாயம் வளர விடுவதில்லை,'' என பொறி பறக்கிறார் உமைபானு.
மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு செயல்படும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளராக, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருந்து வரும் உமைபானு, இன்றைய தேதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற முஸ்லிம் சிறுபான்மை பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் எனலாம். தவிர, அல் அமாநாத் சோஷியல் அன்டு சாரிட்டபுள் டிரஸ்டின் தலைவராகவும் உள்ளார்.
பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றதாலோ என்னவோ, முஸ்லிம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய ஊக்கியாகவும் இருந்து வருகிறார். அமைப்பின் சேவைகள், பெண்கள் அரசியல் குறித்தும் தைரியமாக பேசினார். அவர் சொல்கிறார்...
என் கணவர், பாஷா. ஏற்றுமதி தொழில் செய்து ...





