Sunday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும் சண்முகம் மற்றும் மணி என்ற இருபெரும் கந்துவட்டி மாஃபியாக்களால் சொத்து, சுகங்களை இழந்து நடுத்தெருவில் தத்தளிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 7.2.2019ம் தேதியன்று சென்னையில் தங்களை, விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சங்ககிரி சண்முகம் பிரதர்ஸ் தங்களுடைய, நிலத்தையும் இதர சொத்துகளையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுவதாக ஊடகங்களிடம் குமுறினர். ஆளுங்கட்சியினர்க்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் அதை அப்படியே எல்லா ஊடகங்களும் பிரதிபலித்தன.   ஆனால், சண்முகம் சகோதரர்களின் பேட்டியைப் பார்த்த சங்ககிரிகாரர்களோ தலையில் அடித்து நொந்து கொண்டனர். உள்ள நிலவரம் வேறு; செய்தியாக சொல்லப்படுவதோ வேறு என்பதால் அந்த ஊர் மக்கள் ஊடகங்கள் மீதும் நம்பிக்கையற்றுப் ப...
கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை. நரேந்திரமோடி, 'என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,' என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர்.   தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட,...
திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''ஒண்ணு, முட்டா பீஸூ... இன்னொன்னு அடிமுட்டா பீஸூ.... ஆனாலும் சில நேரத்துல ரெண்டு பேருமே கெட்டிக்காரய்ங்கப்பா...'' என்று பேசிக்கொண்டே திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   ''அட அந்த ரெண்டு பேரும் யாருனு சொன்னாத்தானே எங்களுக்கெல்லாம் விளங்கும்'' என்றார் நக்கல் நல்லசாமி.   அதற்குள் தர்பூசணி பழத்துண்டுகளுடன் வந்து அரட்டையில் ஐக்கியமானார் நம்ம ஞானவெட்டியார். ''போன சட்டமன்ற தேர்தலப்பவே முரசு கட்சிய திமுக கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுல சூரியக்கட்சி படாதபாடு பட்டுச்சு. அவங்க கேட்ட தொகுதிகள், தேர்தல் செலவுனு பேரம் படியாததாலதான் சூரியக்கட்சில இருந்து வெளியேறி, மநகூவுல சங்கமிச்சாரு கேப்டன். இந்தமுறையும் முரசு கட்சிய கூட்டணிக்குள்ள இழுக்கறதுல வழக்கம்போல தளபதியார் சொதப்பிட்டாரேனு சூரியக்கட்சிக்காரய்ங்களே புலம்புறாங்கப்பா.   மாம்பழம்தான் கனியாம போ...
சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

குற்றம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் இன்று (பிப்ரவரி 20, 2019) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.   நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத...
திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

அரசியல், திண்ணை, முக்கிய செய்திகள்
''உஷ் அப்பாடா....இப்பவே இப்படி சுட்டெரிக்குதே... இன்னும் அக்னி நட்சத்திர சீசன்லலாம் நம்மாள பகல்ல வெளியே தலைக்காட்டக்கூட முடியாது போலருக்கு..." அடர்த்தியான தலைமுடி ஊடாக வழிந்த வியர்வையைத் துடைத்தபடி திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர். ''வெயில் மட்டுமா...? அரசியல் களமும் சூடுபிடிச்சிடுச்சே. இப்படியே கொளுத்துனா கத்திரி வெயில்ல மூளை தெறிச்சி வெளியே விழுந்துடும் போல. ஆனாலும் அதெல்லாம் மூளை இருக்கறவன் பட வேண்டிய கவல. எனக்கெதுக்கு...'' என தன்னைத்தானே எள்ளல் செய்து கொண்டார் நக்கல் நல்லசாமி.   ''சரி.... சரி... சட்டுபுட்டுனு வந்த தகவல சொல்லிட்டுப் போயிடறேன்... இன்னும் அரசியல் சேதி நிறைய எழுத வேண்டியிருக்கு. அதிமுக, திமுகவோட எந்தக் காலத்துலயும் கூட்டு வைக்க மாட்டோம். வேணும்னா பத்திரம்கூட எழுதித் தற்ரோம்னு சின்ன மாங்கா sorry... சின்ன அய்யா சொன்னாருல்ல...?'' ''ஆம...
ஆணவக்கொலை: கோகுல்ராஜின் சட்டையில் இருந்தது மனித ரத்தமா? தடய அறிவியல் நிபுணர் பரபரப்பு சாட்சியம்!

ஆணவக்கொலை: கோகுல்ராஜின் சட்டையில் இருந்தது மனித ரத்தமா? தடய அறிவியல் நிபுணர் பரபரப்பு சாட்சியம்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவருடைய சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டை, உள்ளாடைகளில் இருந்தது மனித ரத்தமா? இல்லையா? என்பது குறித்து தடய அறிவியல் ஆய்வக பெண் அதிகாரி நாமக்கல் நீதிமன்றத்தில், திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 18, 2019) பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாதி ஆணவப்படுகொலைகளுள் கோகுல்ராஜின் கொலை வழக்கும் ஒன்று. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தி இன்ஜினியரிங் பட்டதாரியான கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். உடன் படித்து வந்த, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.   கடந்த 24.6.2015ம் தேதியன்று மாலையில், நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல...
”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

அரசியல், குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான நில அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது. 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அலைக்கழித்ததில் இறந்தே போனார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும் இப்போது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.   ''தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிற...
திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

அரசியல், கடலூர், சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க. பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா இருக்கும். இப்போலாம் வீடுங்கதான் பெருசு பெருசா இருக்கே தவிர திண்ணையதான் காணோம். தமிழனுங்க மனசும் சின்னதாப் போச்சுது'' என்றபடியே, சலிப்புடன் நக்கல் நல்லசாமியின் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''எங்கே நம்ம ஞானவெட்டியாரையும், பொய்யாமொழியாரையும் நாலஞ்சு நாளா ஆளையே காணோமே?'' என்றார் நக்கல் நல்லசாமி. ''ஓ...அவங்களா... ஏதோ வேலையா பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க''   ''இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?'' ''யோவ்... இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... என்ற பேனாக்காரர், அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு நமக்கு தெரியலப்பா. ஆனா, அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல ஒரு சேதி சொல்லியிருக்காங்க'...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் எதிரி பிரபுவை காவல்துறையினர் கைது செய்தபோது குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தார்களா இல்லையா? உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? என்று அரசுத்தரப்பு சாட்சியிடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கிடுக்கிப்பிடியாக கேள்விகள் கேட்டதால், சாட்சி குழப்பம் அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். அவருடைய சடலம், மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றினர்.   கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததால், அவர் சாதி ஆணவ ரீதியில் கொல்லப்பட்டதாக அப்போது பல்வேறு தலித் அமைப்ப...
திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?

திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
-திண்ணை-   ''பெரியார் பல்கலைக்கழகத்துல முக்கிய பதவிகளுக்கு ஜனவரி 31, 2019ம் தேதி நடக்க இருந்த இண்டர்வியூவை திடீர்னு ஒத்திவைச்சுட்டாங்களாம். இதுக்கெல்லாம் பேனாக்காரர் பேச்சுதான் காரணம்னு பல்கலைக்கழக வட்டாரத்துல உங்கள பத்திதான் பரபரப்பா பேசிக்கிறாங்கனு,'' சொல்லியபடியே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம நக்கல் நல்லசாமி. ''யோவ் நக்கலு.... அந்த சேதிய நானும் கேள்விப்பட்டேன். அதுக்காக நம்ம பேச்சாலதான் இண்டர்வியூ நின்னுப்போச்சுனு சொல்லி நமக்கு நாமலே பெருமை பேசிக்கிடலாமா?னு,'' கேட்டுக்கொண்டே உப்பு தூக்கலாக போட்ட வறுகடலையை கொறிக்க ஆரம்பித்தார் பேனாக்காரர்.   அப்படியே நமக்கும் ரெண்டு உப்புக்கடலை கொடுங்கனு வந்து அமர்ந்தனர் பொய்யாமொழியாரும், ஞானவெட்டியாரும்.   ''சரி....இண்டர்வியூ எதுனால நின்னுப்போச்சாம்?'' ஆரம்பித்தார் ஞானவெட்டியார்.   ...