
‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
“ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ...