Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சினிமா

அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருகிறார...
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்) திடீ...
‘அவள்’ – சினிமா விமர்சனம்

‘அவள்’ – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று (நவம்பர் 3, 2017) வெளியாகி இருக்கிறது 'அவள்'. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இயக்கம்: மிலிந்த் ராவ்; இசை: கிரிஷ்; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர்; தயாரிப்பு: வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ், ஏடாகி எண்டர்டெயின்மென்ட். புதுமணத் தம்பதிகளான சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஒரு தனி வீட்டில் தங்கி இருக்கின்றனர். அவர்களுடைய வீட்டிற்கு அருகில், இன்னொரு குடும்பம் புதிதாக குடி வருகிறது. அந்த வீட்டில் உள்ள ஜென்னி என்ற இளம்பெண்ணுக்கு திடீரென்று பேய் பிடித்து விடுகிறது. அந்தப் பேய், மெல்ல மெல்ல சித்தார்த் வீட்டுக்குள் நுழைகிறது. அதன்பிறகு நாயகனும், நாயகியும் என்ன ஆனார்கள்? அவர்கள் அந்த பேயை விரட்டினார்களா?...
“நிஜ வாழ்க்கையில் நடிக்கிறேனா?” – ரஜினிகாந்த் பதில்

“நிஜ வாழ்க்கையில் நடிக்கிறேனா?” – ரஜினிகாந்த் பதில்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
‘காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பது கிடையாது’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை (அக். 27, 2017) நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, இன்று (அக்.26, 2017) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பதில் அளித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே நடந்த இந்த சந்திப்பில், ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தார் ரஜினி. ‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நடிப்பத...
அம்மா ஆனார் அசின்! ; பெண் குழந்தை பிறந்தது

அம்மா ஆனார் அசின்! ; பெண் குழந்தை பிறந்தது

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில், 'உள்ளம் கேட்குதே' படத்தின் மூலம் அறிமுகமான அசின், சூர்யாவுடன் நடித்த 'கஜினி' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். நடிகர் விஜய்யுடன் 'போக்கிரி', 'சிவகாசி', கமல்ஹாசனுடன் 'தசாவதாரம்', விக்ரமுடன் 'மஜா', அஜீத்துடன் 'ஆழ்வார்' என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, நம்பர்-1 இடத்தில் இருந்தார். கோலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற 'கஜினி' படம், ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. கஜினியில் அசின் நடிப்பு பாராட்டும்படி இருந்ததால், ஹிந்தி மறுபதிப்பிலும் ஹீரோயின் வேடத்தில் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆமீர்கான், இயக்குநர் முருகதாஸ் உள்பட அனைவருமே எதிர்பார்த்ததால், ஹிந்தியிலும் அவரே நடித்தார். பாலிவுட்டிலும் கஜினி படம் அமோகமாக வெற்றி பெற்றதை அடுத்து, ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப தன் உடல் எடையை மேலும் குறைத்தார். தொடர்ந்து சல்மான்கான் போன்ற முன...
மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. ...
மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றிய வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து 'மீம்ஸ்'கள் மூலமாக 'கிழி கிழி' என்று கிழித்து தொங்கவிட்டுள்ளனர். விஜய் நடிப்பில் உருவான 'மெர்சல்' படம், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே 'ராஜாராணி', 'தெறி' மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீயின் இந்தப்படமும் வெற்றி பெற்றுள்ளது. முன்பு இயக்கிய இரு படங்களிலும் பழைய தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகளின் சாயல்கள் இருப்பதுபோல் 'மெர்சல்' படத்திலும் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'சிவாஜி', 'ரமணா' ஆகிய படங்களின் சாயல்களும் இருக்கவே செய்கின்றன. படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், ராஜநாகம் காட்சிகள் குறித்த சந்தேகங்களால் இப்படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்திடம்...
‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ...
‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் நிலவி வந்த சிக்கல் இன்று (அக். 16, 2017) சுமூகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக, சுமார் ரூ.135 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கிறது 'மெர்சல்'. இதில் நடிகர் விஜய் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார். அதில், மேஜிக் கலைஞராக ஒரு வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இதற்காக அவர் தொழில்முறை மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி பெற்று, படத்திலும் அவரே சுயமாக சில மேஜிக்குகளை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தீபாவளியன்று (அக். 18) உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த விலங்குகள் ந...
நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்தில், நடிகர் விஜய் இன்று (அக். 15, 2017) திடீரென்று சந்தித்தார். விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'மெர்சல்' படம், வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யு / ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. எப்படியும் படத்தை தீபாவளியன்று வெளிக்கொண்டு வந்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும். ஒருபுறம், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெ...