Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சினிமா

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!:  சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சினிமா, சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், 'நாம் தமிழர்' கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது. இயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும். சீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் 'அப்டேட்' செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ...
ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதி...
ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

இந்தியா, சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விருதுநகர்
ஸ்ரீதேவி: 13-08-1963 - 24-02-2018 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி, தங்கள் மகள், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிப்பாள் என ஒருபோதும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தம்பதியின் மகள், ஸ்ரீதேவி.   பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி ஒரு கந்தக பூமி. அந்த மண்ணில் இருந்து ஒரு கனவுக்கன்னி, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்திருக்கிறார் என்பதும்கூட நமக்கான அடையாளம்தான். அவர் மரித்துப்போனார் என்பதைக் கூட நம்ப முடியாத வகையில் கோடிக்கணக்கான மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். பால் மனம் மாறாத வயதிலேயே ஸ்ரீதேவி வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். நான்கு வயதிலேயே, 'துணைவன்' படத்தில் முருகன் வேடம். எல்லா...
நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்;  துபாயில் உயிர் பிரிந்தது

நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்; துபாயில் உயிர் பிரிந்தது

இந்தியா, சினிமா, முக்கிய செய்திகள்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது மாரடைப்பால் திடீரென்று காலமானார். அவருக்கு வயது 55. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1963ம் ஆண்டு பிறந்தார் ஸ்ரீதேவி. நான்கு வயதாக இருக்கும்போதே தமிழில் வெளியான 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தவர், தனது பதினான்காவது வயதில் கே.பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் தடம் பதித்த அவர், இந்தியாவின் கனவுக்கன்னியாக உருவெடுத்தார். அதன்பிறகு பாலிவுட் சினிமா தயாரிப்ப...
கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தண்ணீர் மற்றும் தண்ணீரைச் சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றியும், சமகால அரசியல்வாதிகளின் உள்மனப்போக்கையும் தோலுரிக்கும் படமாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இன்று (பிப்ரவரி 23, 2018) வெளியாகி இருக்கிறது கேணி. கதைக்கரு: தமிழ்நாடு - கேரளா ஆகிய இரு மாநில எல்லைகளிலும் சரிபாதியாக அமைந்திருக்கும் ஒரு வற்றாத கிணறும், அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடும் தமிழக எல்லையோர கிராம மக்களின் போராட்டங்களும்தான் படத்தின் ஒரு வரி கதை. நடிகர்கள்: ஜெயபிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனு ஹாசன், ரேகா, பார்வதி நம்பியார், 'தலைவாசல்' விஜய், எம்.எஸ். பாஸ்கர், பசுபதி, சாம்ஸ், 'பிளாக்' பாண்டி மற்றும் பலர். தொழில்நுட்பக்குழு: ஒளிப்பதிவு: நவ்ஷத் செரீப்; இசை: ஜெயச்சந்திரன்; பின்னணி இசை: சாம் சி.எஸ்.; எடிட்டிங்: ராஜா முஹமது; தயாரிப்பு: ஃபிராகிரன்ட...
நாச்சியார் – சினிமா விமர்சனம்

நாச்சியார் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர் பாலாவிடம் இருந்து சற்றே மாறுபட்ட கோணத்தில், இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் படம், நாச்சியார். காவல்துறை அதிகாரி அவதாரம், ஜி.வி.பிரகாஷின் குப்பத்து பையன் தோற்றம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாச்சியார், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பார்க்கலாம். நடிப்பு: ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, 'ராக்லைன்' வெங்கடேஷ் மற்றும் பலர். இசை: இளையராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் மற்றும் இஓஎன் ஸ்டுடியோஸ் இயக்கம்: பாலா   கதை என்ன? திருமணம் ஆகாத ஒரு மைனர் பெண் கர்ப்பிணி ஆகிறார். சந்தேகத்தின்பேரில் அந்த இளம்பெண்ணின் காதலனை காவல்துறை கைது செய்கிறது. குழந்தை பிறந்த பின்னர்தான் அந்தக் குழந்தைக்கும், கைதான இளைஞனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. எனில், அந்த மைனர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்க...
கூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்!; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”

கூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்!; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”

இந்தியா, உலகம், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியர்களின் தேடலால் இன்றைய தேதியில் கூகுள் தேடியந்திரத்தையே களைத்துப் போகச்செய்திருக்கிறார் ஒரு கேரளத்துப்பெண். பிரியா பிரகாஷ் வாரியார் என்ற மலையாள நடிகை, தன் கண்களால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். அதென்னவோ அரபிக்கடலோர பெண்களுக்கும் அழகுக்கும் அத்தனை பொருத்தம். அதனால்தான் வைரமுத்துவும்கூட, 'அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே...' என்று பாடல் எழுதியிருப்பார். நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு கனவான விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி, ஊரெல்லம் பற்றி எரிந்தபோதுகூட, மற்றொருபுறம், மலையாள தேசத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலும், நடனமும் சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகின. மனித மனங்களின் இரு எதிர்நிலையில் உள்ள குணாம்சமே இதற்குக் காரணம். துக்க வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், அடுத்த கணமே கொண்டாட்டத்திலும் ஈடுபடுகின்றனர் என்பதற்கு ஜிமிக்கி கம்மல்...
சவரக்கத்தி – சினிமா விமர்சனம்;  ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

சவரக்கத்தி – சினிமா விமர்சனம்; ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
படங்களில் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கையாளும் மிஷ்கின் மற்றும் ராம் என்ற இரு இயக்குநர்களின் நடிப்பில் காமெடி, குடும்பம், சென்டிமென்ட், காதல் என ரசனையான கலவையில் இன்று (பிப்ரவரி 9, 2018) வெளியாகி இருக்கிறது, 'சவரக்கத்தி'. நடிப்பு: ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் இசை: அரோல் குரேலி ஒளிப்பதிவு: கார்த்திக் தயாரிப்பு: லோன்லி உல்ஃப் புரடக்ஷன்ஸ் இயக்குநர்: ஜி.ஆர். ஆதித்யா கதை என்ன?: கத்தி என்றாலே அது உயிரைக்கொல்லும் ஆயுதம் என்பதாகவே மனிதர்களின் பொதுப்புத்தியில் உறைந்து கிடைக்கிறது. ஆனால், அதே கத்திதான் உயிரை பிரசவிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. பொருள் ஒன்று; நோக்கம் வேறானது என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை. திரைமொழி: கொடூரமான ரவுடியான மங்கா (மிஷ்கின்), சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார். பரோல் விடுப்பு முடிந்து, மாலை 6 மணிக்குள் மீண்டும...
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று (பிப்ரவரி 2, 2018) வெளியாகி இருக்கிறது, 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. திரையரங்குகள் முன்பு, பெரிய அளவில் கட்-அவுட் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது அவருடைய ரசிகர்கள் பட்டாளம். நடிகர்கள்: விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, டேனியல், விஜி சந்திரசேகர், ராஜ்குமார், ரமேஷ் திலக் மற்றும் பலர். இசை: ஜஸ்டின் பிரபாகரன்; ஒளிப்பதிவு: ஸ்ரீசரவணன்; படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்; இயக்கம்: ஆறுமுககுமார். கதை என்ன?: ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே உள்ளது எமசிங்கபுரம். அங்கே, எமகுலம் என்ற பழங்குடியினர் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களுக்கு எமதர்மன்தான் குலதெய்வம். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் எமனிடம் வாக்கு கேட்டுவிட்டு அதன்படி நடப்பதுதான் எமசிங்கபுரத்தின் வழக்கம். அந்த ஊரின...
பாகமதி – சினிமா விமர்சனம்

பாகமதி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று (ஜனவரி 26, 2018) ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது, 'பாகமதி'. ஹாரர் மற்றும் அரசியல் திரில்லர் கலந்த புதிய கோணத்தில் மிரட்டுகிறாள் பாகமதி. நடிப்பு: அனுஷ்கா, உண்ணி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி ஷர்மா, பிரபாஸ் சீனு, 'தலைவாசல்' விஜய், வித்யூலேகா, தேவதர்ஷினி மற்றும் பலர். இசை: எஸ்எஸ் தமன்; ஒளிப்பதிவு: மதி; எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்; தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்; இயக்கம்: ஜி.அசோக். பாகமதி கதையை அனுஷ்காவிடம் கடந்த 2012ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டு, அவருடைய கால்ஷீட்டுக்காக அய்ந்து ஆண்டுகள் காத்திருந்தாராம் படத்தின் இயக்குநர். அந்த காத்திருப்பு, கொஞ்சமும் வீண் போகவில்லை. இயக்குநருக்கும், அனுஷ்காவிற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்தான். கதை என்ன?: பாகமதியில், சஞ்சலா என்ற பாத்திரத்தில் அனுஷ்கா ஒரு நேர...